மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!

0
மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை - உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!
மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை - உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!
மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – உயர்கல்வி மாணவர்கள் கவனத்திற்கு!

மாற்றுத்திறன் கொண்ட தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருக்கும் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது.

அரசு உதவித்தொகை:

இந்தியாவில் 40% க்கும் மேல் உடல் ஊனம் உடையவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு தேசிய அடையாள அட்டை கொண்டுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையானது ஆரம்பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை என ஒவ்வொரு நிலைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மாநில அரசும் பல்வேறு உதவித்தொகையை வழங்குகிறது. அதன் அடிப்படையில் 1 முதல் 5ம் வகுப்பு பயில்பவர்களுக்கு 1000 ரூபாயும், 5 முதல் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.

தமிழக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நவம்பர் 15ம் தேதி வரை கால அவகாசம்!

அதனை தொடர்ந்து மத்திய அரசு முழு நேரமாக அங்கீகரிக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது. அதன்படி 9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465 முதல் ரூ.46,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 11ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ.1,00,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!

முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி தற்போது புதுச்சேரியில் இந்த திட்டம் புதுவை சமூக நலத்துறை இயக்குநர் தெ.காலாவதி அவர்களால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தகுதியான மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களுடன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!