‘தமிழும் சரஸ்வதியும்’ நட்சத்திராவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் பதிவு!

0
'தமிழும் சரஸ்வதியும்' நட்சத்திராவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் - வைரலாகும் பதிவு!
'தமிழும் சரஸ்வதியும்' நட்சத்திராவுடன் இணைந்த 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர் - வைரலாகும் பதிவு!
‘தமிழும் சரஸ்வதியும்’ நட்சத்திராவுடன் இணைந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் – வைரலாகும் பதிவு!

விஜய் டிவி தமிழும் சரஸ்வதியும் சீரியலில் சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நக்ஷத்ரா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடிக்கும் குமரன் பற்றி ரசிகரின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார்.

நடிகை நக்ஷத்ரா:

சன் டிவி பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து மக்களிடம் புகழ் பெற்றவர் நக்ஷத்ர நாகேஷ். இவர் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் ஷார்ட் பிலிம், மியூசிக் ஆல்பம் உள்ளிட்டவற்றிலும் பணியாற்றி உள்ளார். மேலும் திரைப்படங்களிலும் சில ரோல்களில் நடித்துள்ளார். பின்னர் சில சீரியல்களில் தலைகாட்டியிருந்த இவர் சன் டிவி-யில் குஷ்புவுடன் நடித்த லக்ஷ்மி ஸ்டோர்ஸ் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா, மின்னலே, நாயகி என அடுத்தடுத்து பல சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஸ்ருதி செய்த காரியம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

சிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது தமிழும் சரஸ்வதியும் சீரியல் மூலம் சின்னத்திரையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த சீரியலில் அவர் சரஸ்வதி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபக் நடிக்கிறார். இந்த சீரியலில் வில்லியாக தெய்வமகள் சீரியல் புகழ் காயத்ரி நடிக்கிறார். இந்நிலையில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இணைந்து மகா சங்கமம் நடைபெற இருக்கிறது.

‘கண்ணம்மா பேச வேண்டிய டயலாக் எல்லாம் வெண்பா பேசுறா’ பாரதி கண்ணம்மா முதல் கயல் வரை – டாப் கமெண்ட்ஸ்!

அதற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்த குமரன் பற்றி ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். அப்போது குமரன் சிறந்த பிட்னெஸ் வைத்திருப்பதாக சொல்கிறார். அவர் சிறந்த நடிகர், சூப்பராக நடனம் ஆடுவதால் அவருக்கு ரசிகராக நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவரும், அவரது மனைவியும் சிறந்த ஜோடி என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!