சர்ச்சைக்கு மத்தியில் NLSIU பட்டமளிப்பு விழா ரத்து
பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகம் (NLSIU), செப்டம்பர் 12 அன்று நடைபெறவிருந்த பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், NLSIU பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-க்கு திட்டமிடப்பட்டிருந்த விழா நடைபெறாது; மாணவர்களுக்கு பட்டங்கள் in absentia முறையில் வழங்கப்பட்டு, சான்றிதழ்களை கூரியர் அல்லது வளாகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பல்கலைக்கழகம் இதற்கான காரணமாக “தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” என தெரிவித்துள்ளது.
CJI சர்ச்சைக்கு மத்தியில் NLSIU பட்டமளிப்பு விழா ரத்து
பெங்களூருவில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளி பல்கலைக்கழகத்தின் (NLSIU) 2026-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா செப்டம்பர் 12 அன்று நடைபெற இருந்தது.
இந்த நிலையில், இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஆகியோரின் பங்கேற்பு தொடர்பாக மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பல்கலைக்கழகம் பட்டமளிப்பு விழாவை ரத்து செய்துள்ளது.
“தவிர்க்க முடியாத சூழ்நிலைகள்” காரணமாக விழா ரத்து செய்யப்படுவதாக NLSIU நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டமளிப்பு விழா நடைபெறாவிட்டாலும், அனைத்து தகுதியான மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்படும். மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை கூரியர் மூலமாகவோ அல்லது பல்கலைக்கழக வளாகத்திலோ பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் நடத்திய எதிர்ப்பில் பங்கேற்றவர்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



























