NLC நிறுவனத்தில் Advisor காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Advisor to CMD பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Advisor to CMD பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Engineering தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 60 முதல் 64 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
UPSC Syllabus 2025: Prelims, Mains & Interview – Free PDF Download in Tamil
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு NLC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
























