
நிலத்தடி நீர் நிலைகளில் நைட்ரேட் மாசுபாடு அதிகரிப்பு…!! மத்திய நிலத்தடி நீர் வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்…!!
மக்களின் அன்றாட பயன்பாட்டிற்கான மிக முக்கிய ஆதாரமாக தண்ணீர் விளங்கி வருகிறது. மேலும், தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்ய மக்கள் பலரும் நிலத்தடி நீர் ஆதாரங்களான கிணறுகள் மற்றும் போர் மோட்டார்களையே சார்ந்தே இருக்கின்றன. இந்நிலையில் நைட்ரஜன் சார்ந்த உரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளைப் பயன்படுத்தும் விவசாய பகுதிகளில், நைட்ரேட் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, CGWB நடத்திய ஆய்வில் , இந்தியா முழுவதும் 440 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் அதிக நைட்ரேட் அளவுகள் கண்டறியப்பட்டுள்ளதாக “மத்திய நிலத்தடி நீர் வாரியம்” (CGWB) தெரிவித்துள்ளது. இதில் “தமிழ்நாடு, உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா” மாநிலங்களில் 2017-23 காலகட்டத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட நைட்ரேட் அளவை விட “20 சதவீதம்” அதிகம் இருப்பதாக வருடாந்திர நிலத்தடி நீர் நிலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

























