அரசு மருத்துவக் கல்லூரியில் Echo Technician வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் DEO, Echo Technician, IT Coordinator பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DEO, Echo Technician, IT Coordinator பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MCA / BCA / B.Sc / Diploma in Cardiac Technology / Medical Imaging Technology / Degree / Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || கடைசி வாய்ப்பு!
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 05.05.2025ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























