WhatsApp Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இமேஜ் எடிட்டர் அறிமுகம்!

0
WhatsApp Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இமேஜ் எடிட்டர் அறிமுகம்!
WhatsApp Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் - இமேஜ் எடிட்டர் அறிமுகம்!
WhatsApp Web பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – இமேஜ் எடிட்டர் அறிமுகம்!

வாட்ஸ் அப் வெப் பயனர்களின் வசதிக்காக ஒரு புதிய இமேஜ் எடிட்டர் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் பயனர்கள் இந்த புதிய வசதிகளை செயலியை அப்டேட் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட்:

உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமாக திகழும் வாட்ஸ் அப் செயலி தனது பயனர்களுக்கு அவ்வப்போது சில அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இதற்கு முன்னதாக வாட்ஸ் அப் பயனர்களுக்கான வீடியோ கால் அம்சத்தில் சில மாற்றங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இதனுடன் தற்போது View Once உள்ளிட்ட பல செயல்பாடுகள் தற்போது வெளியாக இருக்கிறது. அந்த வகையில் வாட்ஸ் அப் வெப் பயனர்களுக்கான இமேஜ் எடிட்டர் என்ற புதியதொரு அம்சத்தை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு!

அதன் மூலம் பயனர் ஒருவர் ஏதாவதொரு புகைப்படத்தை அனுப்புவதற்கு முன்னதாக அவற்றில் சில எடிட்களை செய்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றை மொபைல் பதிப்பில் பயன்படுத்தும் போது சில எமோஜிகளையும் உள்ளடக்கி இருக்கும். இந்த இமேஜ் எடிட்டர் அம்சம் முன்னதாக வாட்ஸ் அப் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதன் மூலம் புகைப்படத்தை திருத்தவும், குறிக்கவும், பில்டர்களை சேர்க்கவும், டெக்ஸ்ட் போன்றவற்றை உள்ளிடவும் முடியும். இந்த சேவைகள் தற்போது வாட்ஸ் அப் வெப் பயன்பாட்டிலும் புதிய அப்டேட் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் வாட்ஸ் அப் வெப் பயனர்களும் தற்போது புகைப்படத்தில் டூடுல் செய்யவும், ஸ்டிக்கர்கள், எமோஜிகளை உள்ளடக்கவும், க்ராப் செய்யவும் முடியும். இதனுடன் வாட்ஸ் அப் செயலியின் 2.21.16.10 பதிப்புடன் புதிய எமோஜிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. WABetaInfo தகவலின் படி இந்த புதிய எமோஜிகள் பீட்டா பயன்பாடுகளுக்கு மட்டும் வர உள்ளது. இதன் கீழ் ஆண், பெண் இருவரும் சேர்ந்துள்ள எமோஜி, இருவரும் முத்தமிடுதல், பேஸ் எமோஜி, மேகங்களில் வரும் எமோஜி, சிகை மற்றும் தாடி அலங்கார எமோஜி உள்ளிட்ட சுமார் 217 எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!