ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு!

0
ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு!
ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி - இஸ்ரோ அறிவிப்பு!
ராக்கெட்டில் கோளாறு, EOS-03 செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – இஸ்ரோ அறிவிப்பு!

இஸ்ரோ நிறுவனம் சார்பில், புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் திடீரென ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரோ நிறுவனம்:

புவி கண்காணிப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளுக்காக இஓஎஸ்-03 (ஜிஐசாட்) என்ற அதிநவீன ‘ஜியோ இமேஜிங்’ செயற்கைக்கோள் இஸ்ரோ சார்பில் தயாரிக்கப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவுதலுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்த நிலையில் ஏவுதளத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) காலை 5.45 மணி அளவில் இஓஎஸ்-03 செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

அரசு ஓய்வூதிய திட்டத்தின் குடும்ப ஓய்வூதிய விதிகள் மாற்றம் – முழு விவரங்கள் இதோ!

இஓஎஸ் செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதிலுள்ள 5 விதமான 3டி கேமராக்கள் மற்றும் தொலைநோக்கி மூலம் புவிப்பரப்பை துல்லியமாக படம் எடுக்க முடியும். தட்பவெப்பநிலை மற்றும் வானிலை நிலவரங்களை நிகழ்நேர தன்மையில் தொடர்ந்து கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புயல் போன்ற பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக செய்ய உதவியாக இருக்கும். அதனுடன் வனப்பகுதிகள், விவசாயம், நீர்நிலைகள், மேகத்திரள்கள் வெடிப்பு, இடியின் தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள இது பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு சிறப்புமிக்க விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், புவிசுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடையவில்லை என்று இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிஎஸ்எல்விஎப்-10 ராக்கெட் மூலம் இஓஎஸ்-03 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் முதல் இரு படிநிலைகள் சிறப்பாகவே செயல்பட்டு பிரிந்தன. ஆனால், செயற்கைக்கோளை வெற்றிகரமாக புவிசுற்றுப்பாதையில் நிலைநிறுத்தவில்லை. ராக்கெட்டின் கிரயோஜெனிக் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஜிஎஸ்எல்வி எப்10 ராக்கெட் திட்டம் முழுமை அடையவில்லை என்று தெரிவித்துள்ளது.

IND vs ENG 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம் – வெற்றிக் கணக்கை துவக்குமா கோஹ்லியின் படை?

இது குறித்து இஸ்ரோ நிறுவன தலைவர் கே. சிவன் கூறுகையில், ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட்டின் கிரயோஜெனிக் எஞ்சின் பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார். 4 பிரிவுகளாக அமைக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் 2 பிரிவுகள் மட்டும் பிரிந்து வெற்றிகரமாக இயங்கின. ஆனால், 3-வது பிரிவு இயங்காததால் தோல்வி அடைந்துள்ளது. இந்த செயற்கைக்கோளை ஏப்ரல் மாதம் செலுத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

[table “1078strong” not found /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!