ஏர்டெல், ஜியோ மற்றும் VI ரூ.199 திட்டங்கள் – அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா!

0
ஏர்டெல், ஜியோ மற்றும் VI ரூ.199 திட்டங்கள் - அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா!
ஏர்டெல், ஜியோ மற்றும் VI ரூ.199 திட்டங்கள் - அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா!
ஏர்டெல், ஜியோ மற்றும் VI ரூ.199 திட்டங்கள் – அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் டேட்டா!

ஏர்டெல், ஜியோ மற்றும் VI நிறுவனங்கள் ரூ.199 க்கு அளிக்கும் பல்வேறு விதமான சேவைகள் மற்றும் பலன்களையும் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பற்றிய முழு விவரங்களையும் கீழே காண்போம்.

ரூ.199 திட்டம்:

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஊரடங்கு காரணமாக பலரும் வீட்டில் இருந்து வேலை பார்த்து வருகின்றனர். மாணவர்களுக்கான பாடங்களும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும், போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். மாதம் முழுவதுக்குமான ரூ.199 திட்டத்தில் தற்போது பல சலுகைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் சலுகைகள்:

ஏர்டெல் நிறுவனம் ரூ.199 க்கு வரம்பற்ற அழைப்புகள், 1 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் அமேசான் மொபைல் பதிவையும் 30 நாட்களுக்கு இலவசமாக அணுகலாம். மேலும், இலவச ஹலோ ட்யூன்களையும், விங்க் மியூசிக் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவையையும் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 24 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே வீடுகளில் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு உள்ளவர்களுக்கு மொபைலில் அதிக டேட்டா தேவை இருக்காது. இருப்பினும், வரம்பற்ற அழைப்புகள் அவர்களுக்கு தேவைப்படும். இது போன்றவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதே விலையில் உள்ள ஜியோ மற்றும் VI நிறுவனங்களின் திட்டங்களை பார்ப்போம்.

ஜியோ திட்டம்:

ஜியோவின் ரூ 199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன், வாடிக்கையாளர்கள் 1.5 ஜிபி தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு பெற முடியும். இந்தத் திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்.எம்.எஸ் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் JioTV, JioCinema மற்றும் பலவற்றை உள்ளடக்கிய Jio பயன்பாடுகளையும் அணுக முடியும். தினசரி 1 ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டமும் உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 24 நாட்களுக்கு 100 தினசரி எஸ்.எம்.எஸ் வழங்குகிறது. ரூ. 149 க்கு இந்த திட்டம் கிடைக்கிறது.

VI திட்டம்:

Vi நிறுவனமும் தினசரி 1 ஜிபி தரவைக் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. ரூ.199 க்கு விற்பனை செய்யப்படும் இந்த திட்டத்தில், வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 தினசரி எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்தத் திட்டத்தில் Vi மூவிகள் மற்றும் டிவி அணுகல் போன்ற சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!