சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த சீசனில் அணிக்காக களமிறங்கும் 3 புதிய வீரர்கள்?

0
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த சீசனில் அணிக்காக களமிறங்கும் 3 புதிய வீரர்கள்?
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அடுத்த சீசனில் அணிக்காக களமிறங்கும் 3 புதிய வீரர்கள்?
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அடுத்த சீசனில் அணிக்காக களமிறங்கும் 3 புதிய வீரர்கள்?

நடப்பு IPL சீசனில் மோசமான ரன் எடுத்து, லீக் சுற்றை இழக்கும் விளிம்பில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, அடுத்த ஆண்டுக்கான ஏலத்தின் போது சில முக்கியமான வீரர்களை அணிக்கு எடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கணிப்புகள் எழுந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியன் பிரீமியர் லீக்கில் மிகவும் புகழ்பெற்ற அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நடப்பு ஐபிஎல் 2022 போட்டியில் மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறது. அந்த வகையில், நான்கு முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் ஏழு தோல்விகளுடன் லீக் சுற்றில் இருந்து வெளியேறும் விளிம்பில் உள்ளனது. இந்த சீஸனின் ஆரம்பத்தில் MS தோனி தனது கேப்டன் பதவியை துறந்து, ரவீந்திர ஜடேஜாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால் அந்த நடவடிக்கை பலனளிக்கவில்லை.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் – ரூ.100 இருந்தாலே சேமிப்பை தொடங்கலாம்! முழு விவரம் இதோ!

மறுபக்கத்தில் அணியின் செயல்திறன் கடுமையான வீழ்ச்சியைக் கண்டது. இப்போது பல தோல்விகள் மற்றும் குறைந்தபட்ச வெற்றிகளுக்குப் பிறகு, தோனிக்கு மீண்டும் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் சீரான நிலைக்கு வரவில்லை என்று தான் சொல்ல முடியும். இது தவிர CSK அணியில் குறிப்பிட்ட சில வீரர்களின் இழப்பு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் தீபக் சஹார், டூ பிலிஸிஸ் ஆகியோர் அணியில் இல்லாதது பெரும் பின்னடைவாக மாறி இருக்கிறது. அதனால் அடுத்து வரும் ஆண்டில் CSK அணி ஏலத்தின் போது மூன்று வீரர்களை குறிவைக்கலாம் என கணிப்புகள் எழுந்திருக்கிறது.

பென் ஸ்டோக்ஸ்:

சிஎஸ்கே அணிக்கு இப்போது பேட்டிங்கில் பங்களிப்பு தரக்கூடிய ஒரு ஆல்ரவுண்டர் தேவை. அந்த வகையில் மைதானத்திற்குள் உள்ளே நுழைந்தவுடனேயே பெரிய ஷாட்களை அடிக்கக்கூடியவர், ஆட்டத்தின் மீது கட்டுப்பாட்டை வைத்திருக்கக்கூடியவர், இன்னிங்ஸை நங்கூரமிடக்கூடியவர் மற்றும் டிஃபென்டிங்கின் போது ஒரு திருப்புமுனையை வழங்கக்கூடியவரும் அணிக்கு தேவையாக இருக்கிறது. இப்படிப்பட்ட சேவைகளை தரக்கூடியவர் தான் பென் ஸ்டோக்ஸ். நடப்பு சீசனில் பென் ஸ்டோக்ஸ் தனது அற்புதமான பேட்டிங் திறமைகளால், ஒரு அனுபவமிக்க வீரராக காணப்பட்டு வருகிறார்.

மறுபக்கத்தில் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது, கேப்டன் பொறுப்பு ஆகியவை அவரை காயப்படுத்தி இருக்கிறது. இப்போது சென்னை அணி ஏற்கனவே கேப்டன்சி பிரச்சனைகளை சந்தித்து வருவதால், எம்எஸ் தோனிக்கு பின்னர் அணியை வழிநடத்தி செல்ல ஒரு சாத்தியமான வீரரை நிர்வாகம் தேடும். இதற்கு ஸ்டோக்ஸ் சரியான பொருத்தமாக இருக்கலாம்.

சாம் கர்ரன்:

ஐபிஎல்லின் முந்தைய சீசன்களில் CSK உடன் தொடர்புடையவர் சாம் கர்ரன். கடந்த 2020 சீசனில் சென்னை அணியில் பிரகாசித்த கர்ரன் தனது ஆல்ரவுண்ட் செயல்திறன் மூலம் அனைவரையும் கவர்ந்தார். அவர் தனது சிறப்பான ஆட்டத்திற்காக 2021 சீசனிலும் CSK அணியால் தக்கவைக்கப்பட்டார். இருப்பினும் ஒரு காயம் அவரை ஐபிஎல் 2022 லிருந்து விலகச் செய்துள்ளது. இப்போது அடுத்த ஆண்டில் சிஎஸ்கே அணி அவரை தனது பழைய இடத்திற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அவரது எண்ணிக்கை இதுவரை நன்றாக இருக்கும் நிலையில் 2023 சீசனுக்கான CSK அணியில் சாம் கர்ரானை எதிர்பார்க்கலாம்.

அக்ஷய் வாட்கர்:

27 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் அக்ஷய் வாட்கர் இந்திய உள்நாட்டு அமைப்பில் விதர்பாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வீரர் ஆவார். சமீபத்திய சையத் முஷ்டாக் அலி டிராபியில் (SMAT) அவர் தனது அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றதில் முக்கிய பங்கு வகித்திருந்தார். வாட்கருக்கு அதிக அனுபவம் இல்லை என்றாலும், அவர் 15 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 23.08 சராசரி மற்றும் 100.36 என்ற சராசரியில் 277 ரன்கள் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் விதர்பாவுக்காக அவர் விளையாடிய கடைசி மூன்று ஆட்டங்களில் இருந்து இரண்டு சதங்கள் அடித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

மேலும் அந்த அணிக்கு நிலையான வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது வரை CSK அணியின் கீப்பர்-பேட்டர் தேர்வாக N ஜெகதீசன் இருக்கிறார். ஆனால் அவர் கடந்த 2018ம் ஆண்டு முதல் CSK அணியில் இருந்தும் அவருக்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு ஐபிஎல்லில் எம்எஸ் தோனி பங்கேற்பது கேள்விக்குறியாக இருப்பதால் அணிக்கு மாற்று வீரர் ஒருவர் தேவைப்படும். இப்போது ஸ்டம்புகளுக்குப் பின்னால் கையுறைகளை அணிவதற்காக, அந்த இடைவெளியை நிரப்புவதற்கு வாட்கர் ஒரு சிறந்த மனிதராக இருக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!