கிக் தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய ஓய்வூதியத் திட்டம்..

0
???? ???????????????? ??? ?????????.. ???????? ??????????? ????? ????? ?????????? ???????..
கிக் தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய ஓய்வூதியத் திட்டம்..

கிக் தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. விரைவில் நடைமுறைக்கு வரும் புதிய ஓய்வூதியத் திட்டம்..

Swiggy, Rapido, Ola போன்ற ஆன்லைன் சேவைகளில் நிதித் தேவைகளுக்காக சில நாட்கள் அல்லது சில மணி நேரங்கள் வேலை செய்பவர்களை கிக் தொழிலாளர்கள் என குறிப்பிடுவர். மேலும், சமீபத்தில் நடந்த மத்திய பட்ஜெட்டில் கிக் தொழிலாளர்கள் தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை நிதியமைச்சர் வெளியிட்டார். இதில் கிக் தொழிலாளர்களுக்கு “இ-ஷ்ரம் போர்ட்டல்” மூலம் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டைகளை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில் ஆன்லைன் தளங்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களின் ஓய்வூதிய திட்டம் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

மக்களின் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளை (16-02-2025) மின்தடை.. மின்வாரியம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு..

அதாவது, கிக் தொழிலாளர்களின் பணி தற்காலிகமானது என்பதால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு சேவை பரிவர்த்தனையில் இருந்தும் மத்திய தொழிலாளர் துறை ஒரு குறிப்பிட்ட தொகையை “சமூக பாதுகாப்பு பங்களிப்பு” திட்டத்தின் கீழ் கிக் தொழிலாளர்களின் ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என . கூறப்படுகிறது. மேலும், கிக் தொழிலாளர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆன்லைன் சேவைகளில் பணி புரிந்தாலும் இந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஓய்வு பெறும்போது திரும்பப் பெறலாம் அல்லது பல EMI-களாகப் பிரித்து, தவணை முறையில் வங்கிக் கணக்கின் மூலம் இந்த டெபாசிட் தொகையை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!