TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – புதிய வேலை முறை அறிமுகம்! முடிவுக்கு வரும் WFH?

0
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - புதிய வேலை முறை அறிமுகம்! முடிவுக்கு வரும் WFH?
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - புதிய வேலை முறை அறிமுகம்! முடிவுக்கு வரும் WFH?
TCS நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – புதிய வேலை முறை அறிமுகம்! முடிவுக்கு வரும் WFH?

டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தற்போது ஹைப்ரிட் ஒர்க் மாடலை பின்பற்ற திட்டமிட்டுள்ளதால் ஐடி ஊழியர்கள் இனி வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

IT நிறுவனம்

கொரோனா பாதிப்பின் தாக்கம் அனைத்து துறைகளிலும் குறிப்பாக ஐடி துறையிலும் பல மாற்றங்களை நிகழ்த்தி இருக்கிறது. இதனால் IT நிறுவனங்களை சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்றி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டுமாக அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டுள்ளன. அதாவது இந்த நிறுவனங்கள் இனி ஹைப்ரிட் ஒர்க் மாடலைப் பின்பற்ற ஆலோசித்து வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5 நாட்கள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

இதன் மூலம் ஐடி ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. ஏனென்றால் IT நிறுவன ஊழியர்கள் வாரத்தில் குறிப்பிட்ட நாட்களில் அதாவது இரண்டு அல்லது மூன்று நாட்களில் அலுவலகம் சென்றுவிட்டு மீதமுள்ள நாட்களில் வீட்டிலிருந்து வேலை செய்யலாம். தற்போதைய நிலைமை குறித்து டிசிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. எங்களது ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளனர். இதன் மூலம், நாங்கள் ஒரு கலப்பின வேலை மாதிரிக்கு நகர்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.

அந்த வகையில் டிசிஎஸ் தற்போது அலுவலகம் மற்றும் வீட்டு வேலை என இரண்டு விருப்பங்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த முறையை அமல்படுத்துவதற்கு வரும் மாதங்களில் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வரவழைக்கவும் திட்டமிட்டுள்ளது. இது தவிர 2025 ஆம் ஆண்டளவில், எந்த நேரத்திலும் நிறுவனம் வழங்கும் வசதிகளின் மூலம் மொத்த பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய முடியும் என்று TCS தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிசிஎஸ் காக்னிட்டிவ் பிசினஸ் ஆபரேஷன்ஸின் குளோபல் ஹெட் அசோக் பாய் கூறுகையில், ‘ஹைப்ரிட் ஒர்க் மாடலில், ஒரு சக்திவாய்ந்த அலுவலக மாதிரியை உருவாக்கியுள்ளோம்.

இது அறிவாற்றல், AI மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் வரும் நாட்களில் TCS அலுவலக ஊழியர்கள் எங்கிருந்தும் வேலை செய்யும் வசதியுடன் ஹைப்ரிட் மாடலை பின்பற்றுவார்கள் என்று டிசிஎஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், TCS நிறுவனத்தின் இந்த பரிணாமம் மற்றும் வேலை செய்யும் முறை ஒரு குறுகிய கால மாற்றம் மட்டுமல்லாமல் அது ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் என்று நம்புகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!