பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா வினுஷாவின் புது கெட்அப் – ரசிகர்கள் உற்சாகம்!

0
பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா வினுஷாவின் புது கெட்அப் - ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா வினுஷாவின் புது கெட்அப் - ரசிகர்கள் உற்சாகம்!
பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா வினுஷாவின் புது கெட்அப் – ரசிகர்கள் உற்சாகம்!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து 7 வருடங்கள் ஆகியும் சேராமல் இருந்த நிலையில் ஒரு புது வழி பிறக்கப் போவது போல் ப்ரோமோ ஒன்று நேற்று வெளியாகியிருந்தது. அதை தொடர்ந்து புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா அவர்கள் பதிவிட்ட போஸ்ட் ஒன்று ரசிகர்களை ஷாக் ஆகியுள்ளது.

ஷாக் ஆக்கும் போஸ்ட்:

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இத்தொடரில் பாரதியை பிரிந்த கண்ணம்மா வீட்டை விட்டு சென்ற காட்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்டாகியது. அன்றிலிருந்து இருவரும் எப்போது சேர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் ஒவ்வொரு நாளும் ரசிகர்கள் எதிர்பார்த்து சீரியலை ஆதரித்து வருகின்றனர். ஆனால், இன்று வரை இருவரும் சேர்ந்த பாடில்லை. இதனால் மக்களின் மனநிலை சீரியல் ஒருவழியாக முடிந்தால் சரிதான் என்ற நிலைக்கு வந்துள்ளது.

கோபியின் மகன் தான் எழில், உண்மையை தெரிந்து கொள்ளும் ராதிகா – சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!

ஏனென்றால் தொடரிலிருந்து முக்கிய ரோலில் நடித்த கண்ணம்மா ரோஷினி அவர்கள் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்ட முயற்சி எடுப்பதற்காக விலகியிருந்தார். அதை தொடர்ந்து அகிலன், அஞ்சலி இருவரும் அடுத்தடுத்து விலகியிருந்தனர். இதனால் ரசிகர்கள் சீரியல் மீது கொண்ட ஆர்வத்தை இழந்தனர். அதை தொடர்ந்து புது கண்ணம்மாவாக வினுஷா அவர்கள் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.

பார்ப்பதற்கு ஒரு சாயலில் பழைய கண்ணம்மா ரோஷினி போன்று இருப்பதாலும், புது கண்ணம்மா நடிப்பாலும் விரைவில் வினுஷாவை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இத்தொடரில் கண்ணம்மாவின் பிறந்தநாள் அன்று நடந்த சம்பவங்களின் எதிர்பார்ப்புகளும் ரசிகர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. மேலும், ஹேமா போட்ட திட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது. ஆனாலும் தற்போது லட்சுமிக்கு அப்பா யாரென தெரிந்த ப்ரோமோ காட்சிகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் வினுஷா இணையத்தில் வெளியிட்டுள்ள ஷூட்டிங் ஸ்பாட்டில் புது லுக்கில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ரசிகர்களின் சீரியல் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!