WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

1
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
WhatsApp பயனர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

WhatsApp செயலியை பயன்படுத்த அதிகாரபூர்வமான ID வழங்க வேண்டும் என கூறப்பட்டு வருகிறது. அப்படி பயனர்கள் அதனை தெரிவிக்கவில்லை என்றால் WhatsApp கணக்கு முடக்கப்படும் என்று அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

WhatsApp:

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக அனைத்தும் நவீன மயமாகி வருகிறது. இந்த கால கட்டத்தில் மொபைல் போன் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. இவ்வாறு மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் அனைவரும் WhatsApp பயனர்களாகவே உள்ளனர். உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கி வரும் WhatsApp நிறுவனம் பயனர்களுக்கு அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. அதேசமயம் பழைய ஆண்ட்ராய்டு மொபைல்களில் WhatsApp தனது சேவையை நிறுத்தி வருகிறது.

தமிழகத்தில் நவம்பர் 9ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

WhatsApp ல் பல்வேறு மாற்றங்கள் வரப்போவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனம் கூடுதலான பாதுகாப்பை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது WhatsApp நிறுவனமானது கணக்கை சரிபார்க்கும் அம்சத்தை கொண்டுவரவுள்ளது. இது WhatsApp paymentக்கும் பொருந்தும். இந்த அம்சத்தை பயன்படுத்தி வேறொருவரின் பெயர் மற்றும் புகைப்படத்துடன் புதிய WhatsApp கணக்கை தொடர முடியாது. அவ்வாறு தொடரப்படும் பட்சத்தில் அடையாளம் சரிபார்க்கப்படும், இல்லாவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ அவசர உதவி தேவைப்படுவோர் கவனத்திற்கு – தொடர்பு எண்கள் அறிவிப்பு!

இது குறித்து வெளியான தகவலின் படி, WhatsApp ல் பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்கு முன், பயனர்கள் அதிகாரப்பூர்வ ஐடியை சமர்ப்பித்து தங்கள் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும் என கூறப்படுகிறது. WhatsApp கணக்கை சரி பார்க்க பயனர்கள் தங்கள் அதிகாரபூர்வ ID களில் ஏதேனும் ஒன்றை கொடுக்க வேண்டும். அதனுடன் சில ஆவணங்கள் மற்றும் விவரங்களை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!