புதிதாக 23 ஆயிரம் இலவச PG கோர்ஸ் – UGC அறிவிப்பு!

0
புதிதாக 23 ஆயிரம் இலவச PG கோர்ஸ் - UGC அறிவிப்பு!
புதிதாக 23 ஆயிரம் இலவச PG கோர்ஸ் - UGC அறிவிப்பு!
புதிதாக 23 ஆயிரம் இலவச PG கோர்ஸ் – UGC அறிவிப்பு!

இந்தியாவில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மானிய குழு ஆன்லைன் வழியாக பட்டப்படிப்பு பயிலும் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதில் தற்போது டிஜிட்டல் பாட உள்ளடக்கத்திற்கான புதிய போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது

ஆன்லைன் வகுப்புகள்:

இந்தியாவில் 900 தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் ஆன்லைன் பட்டப்படிப்புக்கு பல்கலைக்கழக மானியக் குழு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் மூலம் பட்டப்படிப்பை பெற முடியும் என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. நேரடியாக கல்லூரி சென்று பட்டப்படிப்பு படிக்கும் மாணவருக்கு சமமாக ஆன்லைன் வழியில் பட்டப்படிப்புக்கு இணையானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்களை கருத்தில் கொண்டு UGC ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் வளங்களை வழங்க யுஜிசி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் தற்போது டிஜிட்டல் பாட உள்ளடக்கத்திற்கான புதிய போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் கணினி அல்லது மொபைல் போன் மூலமாகவும் இந்த போர்ட்டலை பெறலாம். இதன் மூலம் மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை மட்டத்தில் பல்வேறு படிப்புகளுக்கான வகுப்புகளை ஆன்லைன் வழியாக பெற முடியும் என்று UGC தெரிவித்துள்ளது. தற்போது கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 2.5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் 5 லட்சத்திற்கும் மேலான சிறப்பு நோக்க வாகன மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

LPG கேஸ் சிலிண்டர் விலை முதல் வங்கி கட்டணம் வரை – ஆகஸ்ட் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்!

இந்த மையங்கள் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு டிஜிட்டல் அணுகல் மற்றும் மின் ஆளுமை சேவைகள் எளிதில் கிடைக்கும். தற்போது 23,000 பிஜி படிப்புகள் மற்றும் 136 செல்ஃப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மின் போன்ற உள்ளடக்க வசதியை வழங்குகிறது. அதனை தொடர்ந்து கல்வி அமைச்சின் மூலம், அதிகாரபூர்வ போர்ட்டலிலேயே படிப்புகள் முழுவதும் நடத்தப்படுகின்றது. மேலும் அங்கு ஆய்வுகளையும் இலவசமாக செய்ய முடியும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய போர்டலில் நேரடி வரிகள், கரிம வேதியியல், ஆராய்ச்சி முறை, கான்கிரீட் மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை, விநியோக சங்கிலி ஆகிய படிப்புகள் தொடங்கப்படும் என்று யுஜிசி தலைவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!