மே 1 முதல் இந்த மாற்றம் எல்லாம் வர போகுது – மக்களே அலர்ட்!

0
மே 1 முதல் இந்த மாற்றம் எல்லாம் வர போகுது - மக்களே அலர்ட்!

இந்தியாவில் மே 1 ஆம் தேதி என்னென்ன மாற்றங்கள் வர இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

மாற்றங்கள் என்ன

இந்தியாவில் மாதத்தின் முதல் நாள் நிதி சூழல் பாதிப்படையும் வகையில் பல மாற்றங்கள் வரும். அந்த வகையில் மே 1 ஆம் தேதி என்னென்ன மாற்றங்கள் வரும் என பார்க்கலாம்.

சிலிண்டர் விலை

பொதுவாக மாதத்தின் முதல் நாள் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். அந்த வகையில் மே மாதம் 1 ஆம் தேதி சிலிண்டர் விலை மாற இருக்கிறது. இந்த மாதம் தேர்தல் முடிந்து இருப்பதால் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

TNPSC GROUP 4 EXAM 2024 : பொதுத்தமிழ் – ஏழாம் வகுப்பு இலக்கணம் | முக்கிய கேள்விகள் – பகுதி 10

வங்கி விடுமுறை

மே மாதம் தொடங்கியதில் இருந்து 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

மின்மம் பேலன்ஸ்

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச சராசரி இருப்பு மாற்றப்பட்டுள்ளது. அதாவது அக்கவுண்ட் ப்ரோ மேக்ஸில் குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.50,000 ஆக இருக்கும். அதே  போல அதிகபட்ச கட்டணத்திற்கு ரூ.1,000 வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் FD திட்டம்

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டத்தில் முதலீடு செய்ய கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட நிலையில், இதில் முதலீடு செய்ய கடைசி தேதி 2024 மே 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சேவை கட்டணம்

ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்கு குறித்த சேவை கணக்கு விதிகளை மாற்றி இருக்கிறது. புதிய விதிகளின் படி, டெபிட் கார்டுக்கு வாடிக்கையாளர்கள் ஆண்டுக் கட்டணமாக நகர்ப்புறங்களில் ரூ.200 மற்றும் கிராமப்புறங்களில் ரூ.99 செலுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!