நெஸ்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 30 கடைசி நாள்!!

0
நெஸ்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு - ஏப்ரல் 30 கடைசி
நெஸ்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு - ஏப்ரல் 30 கடைசி
நெஸ்ட் நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு – ஏப்ரல் 30 கடைசி நாள்!!

அறிவியல் படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நெஸ்ட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெஸ்ட் தேர்வு:

அறிவியல் துறையில் உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு நேஷனல் என்ட்ரன்ஸ் ஸ்கிரீனிங் டெஸ்ட் என்ற ‘நெஸ்ட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. புவனேஸ்வர் தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தின் ஆட்டோமிக் எனர்ஜி சென்டர் பார் எக்ஸ்சலன்ஸ் இன் பேசிக் சயின்சஸ் துறை வழங்கும் அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக நெஸ்ட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி மத்திய அரசால் நிறுவப்பட்ட இந்த இரண்டு கல்வி நிறுவங்களிலும் கொடுக்கப்படும் கல்வியானது, மற்ற தொழிற்கல்வி வழங்குவதை விட தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு எம்.எஸ்சி பட்டப்படிப்பில் உயிரியல், வேதியியல், கணிதம் மற்றும் இயற்பியல் போன்ற பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி நிறுவனங்களில் எம்.எஸ்.சி பயிலும் மாணவர்களுக்கு மும்பை பல்கலைக்கழகம் பட்டம் அளிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிப்புகளுக்கு மாணவர்கள் நெஸ்ட் என்ற நுழைவுத்தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி +2 படிப்பை முடித்து இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் போன்ற பாடங்களில் 60% மதிப்பெண் பெற்றுள்ள அனைத்து மாணவர்களும் இந்த தேர்வுகளை எழுதலாம்.

காமராஜர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் – மாணவர்கள் குழப்பம்!!

அதன்படி நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வுகள் 90 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதில் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும். இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 30 கடைசி நாளாக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெஸ்ட் தேர்வு ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் குறித்து மேலும் அறிந்து கொள்ள www.nestexam.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!