பனிப்பாறை ஏரி நிரம்பி வழிந்ததால் நேபாளத்தில் வெள்ள அபாயம் அதிகரிப்பு!
நேபாளம்–திபெத் எல்லைப் பகுதியில் பனிப்பாறை மற்றும் நிலச்சரிவால் உருவான தடுப்பு ஏரி நிரம்பி வழியத் தொடங்கியதால், கீழ்நிலைப் பகுதிகளில் மீண்டும் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது.
ஆற்றின் ஓட்டம் தடுக்கப்பட்டதால் உருவான இந்த ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து, பின்னர் நீர் வெளியேறத் தொடங்கியது. இதையடுத்து பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே வெள்ளப் பாதிப்பை சந்தித்துள்ள நேபாளத்தில், இந்த புதிய சூழல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தியுள்ளது.



























