2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை, தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் (31.12.2019) இரவு (11.59) மணிக்கு நிறைவு பெறவிருந்த நிலையில், ஜனவரி 6– ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: www.nta.ac.in, ntaneet.nic.in அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தம் செய்வதற்கான தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
Download NEET UG Last Date Extended Notice
To Follow Channel –கிளிக் செய்யவும்