NDMA தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் Senior Consultant காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.2,50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது Lead Consultant, Senior Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
NDMA காலிப்பணியிடங்கள்:
Lead Consultant, Senior Consultant பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Senior Consultant கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / ME / M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
NDMA வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 மற்றும் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Consultant ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.1,25,000/- முதல் ரூ.2,50,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
NDMA தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.07.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























