NCCF ஆணையத்தில் Assistant Manager வேலைவாய்ப்பு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || சம்பளம்: ரூ.80,000/-
NCCF எனப்படும் National Cooperative Consumers Federation Of India Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Chartered Accountant, Tax Consultant, Assistant Manager, Field Officer, Accountant, Office Attendant பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chartered Accountant, Tax Consultant, Assistant Manager, Field Officer, Accountant, Office Attendant பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Degree / Master Degree / MBA / PGDM / M.Com / CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35, 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Union Bank of India-வில் 1500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























