நிலவில் நீர்..!! NASA ஏவிய புதிய விண்கலம்..!! என்ன காரணம் தெரியுமா..?
2018 ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான (NASA), பார்க்கர் என்ற விண்கலத்தை ஏவியது. அதன் பின்னர் 2024 ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று, ஏவப்பட்ட ஆர்ட்டெமிஸ் II விண்கலமானது இதுவரை இல்லாத அளவிற்கு பூமியில் இருந்து 61 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று சூரியனை நெருங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் NASA வின் புதிய செயற்கைக்கோள் பற்றி தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறிய லூனார் ட்ரைய்லப்ளாஸிர் (Lunar Trailblazer) என்ற 200 கிலோ எடையுடன் கூடிய செயற்கைக்கோளை NASA இன்று (27-02-2025) நிலவிற்கு அனுப்பியுள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம் சூரியனின் வெளிச்சம் படாத துருவ பகுதிகளில் தண்ணீர் உள்ளதா என்பதை கண்டறியும் ஆய்வு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்” என கூறப்படுகிறது.



























