முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018

0

முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018

இங்கு ஜூலை மாதத்தின் முக்கியமான ஒப்பந்தங்கள்  பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

 PDF பதிவிறக்கம் செய்ய

முக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018:

இந்தியா இங்கிலாந்து இடையே ஒப்பந்தம்

  • சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
பிரதமர் தெரசா மே
அரசி  இரண்டாம் எலிசபெத்
தலைநகரம்   இலண்டன்
நாணயம்   பிரித்தானிய பவுண்டு

 

இந்தியாவுடன் தென் கொரியா ஒப்பந்தம்

  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் தென் கொரியா ஐந்து ஒப்பந்தங்களை கையெழுத்திட்டன. இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான இந்திய-கொரியன் மையத்தை (IKCRI) நிறுவ இருவரும் உடன்பட்டனர்.
  • இந்தியா மற்றும் தென் கொரியா இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தகத்திற்கான முக்கிய பகுதியை அடையாளம் காணும் நோக்கில் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) கையெழுத்திட்டது.
 ஜனாதிபதி மூன் ஜே-இன்
பிரதமர் லீ நாக்-யியான்
தலைநகரம் சியோல்
 நாணயம்  தென் கொரிய ஒன்

 

நேஷனல் போலிஸ் அகாடமி மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது

  • சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய போலிஸ் அகாடமி, ஹைதராபாத் மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி, சர்தா, ராஜஷாஹி இடையே பயிற்சி, மேலாண்மை, கல்வியாளர்கள் பயிற்சியாளர் பரிமாற்றம் ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்தவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
 ஜனாதிபதி அப்துல் ஹமீத்
பிரதமர் ஷேக் ஹசினா
தலைநகரம் டாக்கா
 நாணயம் டாகா

 

பிரிக்ஸ் நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையில் மண்டல அளவில் விமானப் போக்குவரத்து தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகள் பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா. ஜூன்
 நிறுவப்பட்ட ஆண்டு ஜூன் 2006

 

2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்

For English – July Important Mou and Agreements PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here