தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு மாதம் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு மாதம் உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு மாதம் உதவித்தொகை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கு மாதம் உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக அரசு சார்பில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் வெளியிட்ட அறிக்கையின் படி, படித்துவிட்டு வேலைவாய்ப்பு இல்லாமல் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதம் உதவித்தொகை அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும் ரூ. 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 6,000 – ஐ கடந்த கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மேலும் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை இனி வரும் காலங்களில் மாதம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ, 600, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ. 1000 என 10 ஆண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் உதவித்தொகை பெற மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் தகுதி உடையவர்கள்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க குடும்ப வருமானம் ரூ. 72000க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு எதுவும் இல்லை. இந்த திட்டத்தில் சேர தகுதி உடையவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.

Follow our Twitter Page for More Latest News Updates

மேலும் www.tnvelaivaaippu.gov.inஎன்ற இணையதளம் மூலம் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விண்ணப்பத்தின் 7ம் பக்கத்தில், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் சான்று பெற்று வரவேண்டும் எனவும், சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியாக உதவித் தொகை மூன்று ஆண்டுகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு தொடர்ந்து பத்தாண்டுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!