
உங்க தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்துள்ளீர்களா..?? மத்திய அரசு அறிவித்த திடீர் விதி மாற்றம்.. இதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
வெளிநாடுகளில் இருந்து வரும் தங்கம் இறக்குமதியைக் குறைக்கவும், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருக்கும் தங்கத்தை சேகரித்து நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தவும், செப்டம்பர் 15,2015 ஆம் தேதி அன்று தங்க முதலீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்யும் தங்கத்திற்கு அதற்கேற்ப வட்டி கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் தங்கம் முதல் உச்ச வரம்பாக எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்நிலையில் இத்திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
ரயில் பயணிகளே…!! உங்க டிக்கெட்டிற்கு ரிஃபண்ட் வேணுமா…? அப்போ இத மட்டும் பண்ணுங்க..
அதாவது, “தங்கத்தை வங்கியில், டெபாசிட் செய்து வட்டி வருமானம் ஈட்டும் முதலீட்டு திட்டம் நேற்றுடன் (26-03-2025) நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு நிதியமைச்சகம் அறிவித்துள்ளது”. மேலும், சந்தை வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களை விரிவாக மதிப்பீடு செய்த பின், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இனி “வங்கிகளில், 5 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரையிலான, மத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் 3 ஆண்டுகள் வரையிலான குறுகிய கால டெபாசிட் திட்டத்தை வங்கிகள் தங்கள் விருப்பத்திற்கேற்ப தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.

























