தமிழகத்தில் வீடுகளுக்கு மின் கட்டண உயர்வில்லை.. அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மின் இணைப்புக்கான கட்டணங்கள் குறைவாக இருக்கிறது. மேலும், மின்சாரத்தை கையாளும் மின் வாரியத்திற்கு ஏற்பட்ட தொடர் இழப்பை நிவர்த்தி செய்யும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மின் கட்டணமானது 30 % மேல் உயர்த்தப்பட்டது. பின்னர் 2023 ஆம் ஆண்டு 2.18 சதவீதமாகவும், 2024 ஆம் ஆண்டு 4.83 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது.
அந்த வகையில் “நடப்பாண்டு ஜூலை மாதம் முதல் மின் கட்டணத்தை 6 சதவீதமாக உயர்த்த தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்பட்ட நிலையில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும்” என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், “மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆணை விதித்தும், நுகர்வோர்களுக்கு கட்டண உயர்வு கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்”.



























