தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

0
தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் சோளிங்கர் தொகுதியில் 1000 மெட்ரிக் டன் கொள்முதல் திறனுடன் , 94 லட்சம் மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் விவசாயம் படித்த இளைஞர்களுக்கு உடனடியாக பணி வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.

அதிரடி அறிவிப்பு:

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை இன்று மீண்டும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். முதல் நாளான இன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது. இதற்கு துறையின் அமைச்சர் துரைமுருகன் பதிலளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார். இதை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

செங்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, செங்கம் தொகுதியில் 30 ஆண்டுகளாக அனைத்து வசதிகளும் கொண்ட ராட்சச கிணறு மற்றும் 12 ஆயிரம் ஏக்கரில் விதைப்பண்ணை இருந்து வந்தது. தற்போது அது விவசாயிகளின் பண்ணையாக மாற்றி அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர், முதலமைச்சரின் ஆட்சியில் 2 வேளாண்மைப் நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. வேளாண்மை வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். இதை தொடர்ந்து வேளாண்மைத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் B.Sc., Agriculture படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேள்வி எழுப்பினார். இந்த முக்கிய கேள்விக்கு, சோளிங்கர் தொகுதி, கொடைக்கல் கிராமத்தில் ரூ.94 லட்சம் மதிப்பில் துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வேளாண் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பதிலளித்தார். மேலும், கடந்த 10 மாத காலத்தில் 27 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் விளை பொருட்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாகவும், மேலும் தேவைக்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!