தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.மேலும் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

ரேஷன் கார்டு இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாகும். தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. தற்போது பொது விநியோகத் திட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் கணினி பயன்பாடு உள்ளது. இது தவிர, குடும்ப அட்டைதாரர்களுக்கு எல்லா பொருட்களும் பாதிப்பின்றி கிடைக்க கடைகளில் ‘பாயின்ட் ஆப் சேல்’ என்ற விற்பனை முனைய இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, குடும்ப அங்கத்தினர், ஆதார் விவரங்கள், கைபேசி எண் ஆகியவை இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரேஷனில் பொருட்கள் வாங்கும்போது இந்த இயந்திரத்தில் பதிவு செய்யப்படுகிறது. அது பற்றிய தகவல், உடனடியாக இதில் இணைக்கப்பட்டுள்ள கைபேசிக்கு குறுஞ்செய்தியாக வந்துவிடும்.

Google நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோரா ? உங்களுக்கான முக்கிய வேலைவாய்ப்பு தகவல்கள் இதோ..!

ஆனால், பல பகுதிகளில் பொருட்கள் வாங்காமலே, வாங்கியதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி சென்றது. இது தொடர்பாக, அந்தந்த பகுதிகளின் வட்டார வழங்கல் அலுவலர் அல்லது உணவுப் பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட பயோ மெட்ரிக் முறை மூலம் ரேஷன் கடைகளில் நடைபெறும் பதுக்கல், ஒதுக்கல் எல்லாம் கொஞ்சம் குறைந்துள்ளது. இந்நிலையில் இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம், முகவூர் கூட்டுறவு வேளாண் கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை, பாலியல் தொந்தரவு செய்வதாகவும், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்ததாகவும் புகார்கள் வந்தன.

தமிழகத்தில் ஏப்ரல் 14ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த புகார்கள் அடிப்படையில் அவர் விசாரிக்கப்பட்டு, மார்ச் 30 அன்று தங்கதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் கூட்டுறவு ரேஷன் கடைகளில் அரிசி கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டி பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் 98840 00845 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடை பணியாளர்களும் எந்தவித நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுங்கள் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here