தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக புதிய திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக புதிய திட்டம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக புதிய திட்டம் - அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களுக்காக புதிய திட்டம் – அமைச்சர் அறிவிப்பு!

தமிழகத்தில் பெண்களுக்கு என்று பல்வேறு நல திட்டங்களை அரசு செய்து வருகிறது. இதனை தொடர்ந்து கைம்பெண்கள், விதவைகள் உள்ளிட்டோருக்கு தனிப்பட்ட நல வாரியம் அமைத்து, அதன் மூலம் உதவிகள் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நலத்திட்டங்கள்:

இந்தியாவில் பெண்களுக்கு தேவையான பயனுள்ள திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, அரசு உதவி தொகை உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இதெற்கென தனி குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதை அடுத்து தமிழகத்தில் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை உதவி தொகையாக அரசு வழங்கி வருகிறது.

மேலும் இத்தகைய பெண்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்யும் விதமாகி தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சட்ட பேரவையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை 3000மாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இதனை தொடர்ந்து அமைச்சர் வெளியிடீட அறிக்கை மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – செப்.15 முதல் காலை சிற்றுண்டி திட்டம்!

இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழகத்தில் முதியோர்கள் நலனை மேம்படுத்தும் நோக்கில் மாநில மூத்த குடிமக்கள் கொள்கை உருவாக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதாவது தற்போது சமுக நல வாரியம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் அமைப்பு கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!