EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைக்கும் எளிய வழிமுறைகள்!

0
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை இணைக்கும் எளிய வழிமுறைகள்!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - நாமினியை இணைக்கும் எளிய வழிமுறைகள்!
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைக்கும் எளிய வழிமுறைகள்!

EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பிஎஃப் கணக்குடன் நாமினிகளை எப்படி இணைப்பது என்பதற்கான வழிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO கணக்கு:

பிஎஃப் என்பது அரசின் கீழ் செயல்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்களது கணக்குடன் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதை EPFO கட்டாயமாக்கியது. இப்படி பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைத்தால் மட்டுமே ஒரு ஊழியர் குடும்பத்தில் உள்ள எவரையும் நாமினி ஆக்க முடியும். மேலும், விபத்து உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர் இறக்க நேரிட்டால் பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைத்திருந்தால் மட்டுமே பிஎஃப் பணத்தினை பெற முடியும். அப்படி நாமினிகளை இணைக்காவிட்டால் பணம் எடுப்பதில் சிக்கலாகிவிடும்.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!

பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்க மார்ச் 31 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைக்க தவறிவிட்டால் பாஸ்புக்கிற்கான அணுகலை இழக்க நேரிடலாம் என EPFO தெரிவித்துள்ளது. இதனால் உடனே பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. எப்படி பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைப்பது என்பதை பார்க்கலாம்.

முதலில் epfindia.gov.in என்கிற இணையதள முகவரிக்கு சென்று log in செய்து கொள்ளவும். அதன் பின்பு menu tabக்கு கீழே உள்ள Service tab க்கு செல்லவும். அதன் பின்பு employees tab ஐ கிளிக் செய்யவும். அக்கௌன்ட்டை log in செய்ய Universal Account Number (UAN) எண்ணை பயன்படுத்தவும். இதன் பின்பு Manage tab ல் உள்ள e-nomination ஐ தேர்ந்தெடுக்கவும். அதன் பின்பு உங்களது நிரந்தர வீட்டு முகவரியை பதிவு செய்துகொள்ளவும். இதன் பின்பு நாமினி விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்யவும். இதனை Save செய்து கொள்ளவும். அடுத்ததாக Proceed ஐ கிளிக் செய்து ஆதார் எண்ணையும் பதிவு செய்து கொள்ளவும். அடுத்ததாக உங்கள் எண்ணிற்கு OTP நம்பர் செல்லும். இதனை பதிவு செய்துவிட்டால் பிஎஃப் கணக்குடன் நாமினியை இணைத்துவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!