கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவ மாணவர்கள் – மத்திய அரசு திட்டம்!!

0
கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவ மாணவர்கள் - மத்திய அரசு திட்டம்!!
கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவ மாணவர்கள் - மத்திய அரசு திட்டம்!!
கொரோனா சிகிச்சை பணியில் மருத்துவ மாணவர்கள் – மத்திய அரசு திட்டம்!!

இந்தியாவில் கொரோனா சிகிக்சை பணிக்கு மருத்துவ மற்றும் செவிலியர் இறுதியாண்டு மாணவர்களை பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு கலந்தாலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. பணியில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மருத்துவ கல்லூரி மாணவர்கள்:

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்குகளையும், கட்டுப்பாடுகளையும் அதிகரித்து வருகிறது. மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் மக்களின் உயிரை காக்கும் உன்னத பணியை இடைவிடாது செய்து வருகின்றன. இந்தியா முழுவதும் இன்று மட்டும் 3.57 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

இதனால் பல மாநிலங்களின் மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகரிப்பதால் மருத்துவர்களால் இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க இயலவில்லை. மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் எண்ணிக்கையும் போதிய அளவில் இல்லாததால் உரிய நேரத்தில் சிசிக்சை அளிக்க முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நேற்று டெல்லியில் பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடைபெற்றது.

கொரோனா பணியாளர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை – மத்திய அரசு அறிவிப்பு!!

இதில் மருத்துவ கல்லூரி இறுதியாண்டு மாணவர்களையும், செவிலியர்கள் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களையும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் மருத்துவ மற்றும் செவிலியர் இறுதியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியிடப்படும் எனவும் ஆலோசனை கூட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here