தமிழகத்தில் மே 6 முதல் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!

0
தமிழகத்தில் மே 6 முதல் ஊரடங்கு அமல்
தமிழகத்தில் மே 6 முதல் ஊரடங்கு அமல்

தமிழகத்தில் மே 6 முதல் ஊரடங்கு அமல் – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு !!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி முதல் இரவு நேரங்களில் ஊரடங்கும், வார இறுதியில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தவிர வரும் மே 6ஆம் தேதி முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வர உள்ளது.

பொது முடக்க கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்தனர். இதன்படி நாடு முழுவதும் தினசரி 4 லட்சம் வரை புதிய பாதிப்பு பதிவு செய்யப்படுகிறது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவு நோய் தொற்று காணப்படுகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று சற்று படிப்படியாக அதிகரித்து வந்து, தற்போது 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. நாளொன்றுக்கு 100 வரை இறப்பு எண்ணிக்கையும் ஏற்படுகிறது.

இந்த நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்குடன், வார இறுதியில் பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மீண்டுமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பொது முடக்கம் அளவிலான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. இந்த கட்டுப்பாடுகள் மே மாதம் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கான புதிய அறிவிப்பு – அரசு வெளியீடு!!

  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.
  • பயணிகள் பயன்படுத்தும் ரயில், மெட்ரோ ரயில், பேருந்துகள், டாக்சி போன்றவற்றில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.
  • வணிக வளாகங்கள், மால்கள்  இயங்குவதற்கு முழு தடை.
  • இந்த வளாகங்களில் இருக்கிற காய்கறி கடை, மளிகை கடைகளுக்கு அனுமதி இல்லை.
  • தனியாக செயல்படும் மளிகை கடை, காய்கறி கடைகளுக்கு மட்டும் மதியம் 12 வரை அனுமதி.
  • தவிர பால், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு.
  • அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • தேநீர் கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி.
  • திரையரங்குகள், உள் விளையாட்டு அரங்கங்கள், கலாச்சார நிகழ்வுகள், பொழுதுபோக்கு, கல்வி நிகழ்ச்சிகளுக்கு தடை.
  • இறுதி ஊர்வலங்கள், அதை சார்ந்த சடங்குகளுக்கு 20 பேருக்கு மேல் அனுமதி இல்லை.
  • மாநகராட்சி, நகராட்சி போல ஊரக பகுதிகளில் இயங்கும் அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
எவற்றிற்கெல்லாம் அனுமதி :
  • அவசர தேவைகள் காரணமாக விமானம், ரயில் நிலையம் செல்லுவதற்கு வாடகை டாக்சி, கார் அனுமதிக்கப்படும்.
  • தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் இயங்க அனுமதி.
  • ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் இரவிலும் தொடர்ந்து செயல்படலாம்.
  • பெட்ரோல் பங்குகள் செயல்பட அனுமதி.
  • அத்தியாவசிய தொழிற்சாலைகள் இரவிலும் இயங்குவதற்கு அனுமதி.
  • தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் இரவிலும் செயல்பட அனுமதி.
  • சரக்குகள் இறக்கம், ஏற்றுமதிக்கு அனுமதி.
ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு :
  • பால், மருத்துவம் போன்ற அத்தியாவசிய பணிகளுக்கு விலக்கு.
  • ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து செயல்படலாம்.
  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் மட்டுமே செயல்படும்.
  • மின் வணிக சேவைகளுக்கு அனுமதி இல்லை.
  • திருமண நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி.
  • இறப்பு நிகழ்வுகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
  • தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் இரவிலும் செயல்பட அனுமதி.
  • விமான நிலையம் மற்றும் கிடங்குங்களில் சரக்குகள் இறக்கம், ஏற்றுமதிக்கு அனுமதி.
  • இறைச்சி கடைகள் முற்றிலுமாக செயல்படாது.
  • இறைச்சி கடைகள் மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

Download Official Announcement Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!