ஏப்ரல் 3, 5ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் எதிரொலியாக தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகிற ஏப்ரல் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பயிற்சிகள் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தேர்தல் எதிரொலியாக தஞ்சாவூரில் வருகிற ஏப்ரல் 3 மற்றும் 5 ஆகிய தேதிகளில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் – நிதிப்பற்றாக்குறை எதிரொலி!!
தற்போது அதற்கான அதிகாரபூர்வமான அறிவுப்பு வெளியாகியுள்ளது. இதனை முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டார். அதில் தெரிவித்ததாவது, சட்டமன்ற தேர்தல் 2021ல் அனைத்து நிலையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் 8 மையங்களில் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி 03.04.2021 அன்று நடைபெறவுள்ளது. அதன்படி நேற்று (ஏப்ரல் 1) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து பணிநியமன ஆணைகள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டது.
இந்த ஆணைகளை பெற்ற அனைவரும் தவறாமல் 03.04.2021 அன்று பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும். முதலிரண்டு பயிற்சியில் கலந்துகொண்ட இதர பணியாளர்கள் பயிற்சியில் வழங்கப்பட்ட அறிவுரையின் படி வருகிற 05.04.2021 அன்று அவர்களுக்குரிய பயிற்சி மையத்திற்கு செல்லவேண்டும். மேற்படி பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாமல் தேர்தல் பணிகளை புறக்கணிப்பவர்கள் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டம் 1951ஐ மீறியதாக கருதப்பட்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசின் கடன் உத்தரவாத திட்டம் – கால அவகாசம் நீட்டிப்பு!!
இதனை ஏற்கனவே பார்வை (2) கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேர்தல் பணி மற்றும் பயிற்சியில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக 03.04.2021 மற்றும் 05.04.2021 அன்று தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பார்வை (1)ல் காணும் செயல்முறைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்