தமிழகத்தில் நவ.19 உள்ளூர் விடுமுறை – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!
தமிழகத்தில் மகா தீபத்திருநாளை முன்னிட்டு நவ்.19 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் நாளை கார்த்திகை மாதம் பிறக்கும் நிலையில் அதிகாலை 4.45 மணியளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து, பவுர்ணமி தினத்தன்று நவம்பர் 19 ம் தேதி மாலை 6 மணியளவில் அண்ணாமலைகோயில் உச்சியில் மகா தீப கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த மகா தீபத்தை காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இதனால், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நவ.19 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.