
மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…!! ” அரசு அதிரடி உத்தரவு…உங்க மாவட்டமானு பாத்துக்கோங்க”..!!
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி திருக்கோவிலில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெகு விமர்சையாக நடைபெறவிருக்கும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி ராமநாதபுர மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில், ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


























