SSC Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
SSC Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
SSC Tier 1 தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு (நிலை-1) கணினி அடிப்படையில் வருகிற 25ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகள் வீதம் 14 நாட்களுக்கு இத்தேர்வு நடைபெற உள்ளது. தற்போது தேர்வறைக்குள் எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல விவரங்களை பார்ப்போம்.

SSC Tier 1 தேர்வு

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து அரசு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) ஒருங்கிணைந்த மேல்நிலை அளவிலான தேர்வு (CHSL) கணினி அடிப்படையில் வருகிற மே 25ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தென்மண்டலத்தில் இருந்து சுமார் 2,94,445 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் – நகர நிர்வாகம் உத்தரவு!

இத்தேர்வு தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இதே போல் ஆந்திரப்பிரதேசத்தில் திருப்பதி, நெல்லூர், கர்நூல், சிராலா, குண்டூர், விசாகப்பட்டினம், வைசியநகரம், காக்கிநாடா, ராஜமுந்திரி, விஜயவாடா மற்றும் தெலங்கானாவில் வாரங்கல், ஐதராபாத், கரீம்நகர் உள்ளிட்ட இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. ஒரு நாளைக்கு 3 ஷிப்டுகளாக இத்தேர்வு நடைபெற உள்ளது. இதன் முதல் ஷிப்டு காலை 9 மணி முதல் 10 மணி வரையும், 2வது ஷிப்டு பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரையும், 3வது ஷிப்டு மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்குரிய தேர்வு அனுமதிச் சீட்டை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்வறைக்குள் எதற்கெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம். அதன்படி தேர்வர்கள் மின்னணு சாதனங்களான செல்போன், கால்குலேட்டர், ப்ளூடூத், ஹெட்போன், பேனா பட்டன் ஹோல், ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை மற்றும் கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் தேர்வர்கள் 3 முதல் 7 ஆண்டுகள் வரை தேர்வு எழுத முடியாது என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 044 2825 1139 அல்லது 94451 95946 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!