EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – மூன்று மடங்காகும் பென்சன் தொகை? முழு விவரம்!

0
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் - மூன்று மடங்காகும் பென்சன் தொகை? முழு விவரம்!
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் - மூன்று மடங்காகும் பென்சன் தொகை? முழு விவரம்!
EPFO உறுப்பினர்களுக்கு குட் நியூஸ் – மூன்று மடங்காகும் பென்சன் தொகை? முழு விவரம்!

நாடு முழுவதும் உள்ள பல ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை அவர்களது பிஎஃப் கணக்கில் வருங்கால வைப்பு நிதியாக டெபாசிட் செய்து வருகின்றனர். மேலும் ஊழியர்கள் டெபாசிட் செய்யும் இந்த தொகையானது, அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்நிலையில் EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நம்ப முடியாத குட் நியூஸ் வெளியாகியுள்ளது.

EPFO:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது ஊழியர்களுக்கு மிகப் பெரிய சலுகையை வழங்கும் திட்டத்தில் உள்ளது. அதன்படி, அடுத்து வரும் நாட்களில் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது ET Now Swadesh இன் அறிக்கையின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் மூன்று மடங்கு அதிகரிக்கப்படலாம். அதாவது இபிஎஃப்ஓவின் மத்திய அறங்காவலர் குழு கூட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 மடங்கு உயர்த்துவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

இந்த தகவலின்படி, குறைந்தபட்ச ஓய்வூதியம் 1,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்த்தப்படலாம். மேலும் இந்த விவகாரத்தில் தொழிலாளர் செயலாளர் தலைமையிலான குழு விரைவில் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் சுமார் 6.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் EPFO இன் 5 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள். இது தவிர, சிபிடி ஈக்விட்டி வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நிதி அமைச்சகம், 2021-22 நிதியாண்டிற்கான EPF வட்டி விகிதத்தை 8.1 சதவீத வட்டி விகிதமாக அறிவித்தது.

தமிழகத்தில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்

இந்த அறிவிப்பு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சந்தாதாரர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. அதாவது இந்த வட்டி விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள மிகக் குறைந்த அளவாகும். மேலும் 2020-21 நிதியாண்டில், EPF மீதான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குறைந்து வரும் வட்டி விகிதத்திற்கு மத்தியில், EPFO நிதியில் இருந்து பங்குச் சந்தையில் முதலீட்டின் வரம்பை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

உண்மையில், கடன் நிதிகள் தேவையான வருமானத்தைப் பெறவில்லை, எனவே பங்குகளில் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் இலக்கு வருவாயைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முன்மொழிவை பரிசீலிக்க நிதி முதலீடு மற்றும் தணிக்கை குழுவின் முக்கியமான கூட்டம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தக் குழுவால் முன்வைக்கப்படும் முன்மொழிவு EPFO மத்திய அறங்காவலர் குழு முன் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!