
வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட GST வரி வசூல்…!! அதுவும் இவ்வளவு கோடியா..? நிதியமைச்சகம் தகவல்…!
இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு GST வரி வருவாய் கிடைக்கிறது என்பதை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான GST வரி வருவாயை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பென்ஷன் வாங்குவோருக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!! இனி உங்க பணம் உங்களுக்கு உடனே கிடைக்கும்..!
அதாவது, கடந்த நிதியாண்டின் கணக்கு நிறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதுவரை இல்லாத வகையில் கடந்த மாதம் மட்டும் சுமார் ரூ. 2.37 லட்சம் கோடி GST வரி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், GST அமல்படுத்தியதில் இருந்து இதுவே அதிகபட்ச வரி வருவாய் ஆகும். அத்துடன், கடந்த வருடம் ஏப்ரலை ஒப்பிடும் போது இது 12.6 % அதிகமாகும்.

























