சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் முன்மொழிவு…!! தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!

0
சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் முன்மொழிவு...!! தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை
சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் முன்மொழிவு...!! தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை

சட்டப்பேரவையில் கச்சத்தீவு தீர்மானம் முன்மொழிவு…!! தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை

  

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி கடலில் மீன் பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதனை, தவிர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பல முயற்சிகள் மேற்கொண்ட போதும், ஒரு பலனும் அளிக்கவில்லை. இதனால், 1974 ஆம் ஆண்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவை தமிழகத்துடன் இணைத்தால், இதற்கு ஒரு முடிவு வரும் என தமிழக முதல்வர் திட்டமிட்டுள்ளார். மேலும், இன்று (02-04-2025) நடைபெறும் தமிழக சட்டபேரவை கூட்டத்தில் கச்சத்தீவை திரும்ப பெறும் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

அதில், “ஒரு நாளைக்கு இரு மீனவர்கள் வீதம் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்வதாக” கூறியுள்ளார்.  மேலும், “இதுவரை மொத்தம் 74 கடிதங்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதியிருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார். எனவே, “மத்திய அரசு இதற்கு சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கச்சத்தீவை தமிழகத்துடன் விரைவில் இணைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும், இந்த தீர்மானத்திற்கு பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!