முன்னாள் முதல்வர் எடியூரப்பா அதிரடியாக கைது.. ஏன், எதற்காக நிகழ்ந்தது பற்றிய முழு விவரம்..?
தற்போது கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைமுறையில் உள்ளது. மேலும், காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் பால், பெட்ரோல் உள்ளிட்ட 50 அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்திருப்பதாக பாஜக அவ்வப்போது குற்றம்சாட்டி வந்தது. இந்நிலையில் இந்த விலைவாசி உயர்விற்கு காரணமான காங்கிரஸ் அரசை கண்டித்து 24 மணி நேர தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி “பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று (02-03-2025) காலை பாஜக சார்பில் தர்ணா போராட்டம் தொடங்கப்பட்டது. இதில், முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா, பாஜக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, எடியூரப்பாவுடன் போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, மாநில தலைவர் விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் உட்பட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்”.


























