கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் – விஜய் வசந்த் முன்னிலை!!

0
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் - விஜய் வசந்த் முன்னிலை!!
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் - விஜய் வசந்த் முன்னிலை!!
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிலவரம் – விஜய் வசந்த் முன்னிலை!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி 234 தொகுதிகள் உட்பட கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.  அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த் அவர்கள் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த வருடம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனால் அந்த தொகுதிக்கு புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தல் நிலவரம்:

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடந்த ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.  இதற்கான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், முக்கிய அமைச்சர்கள் தங்களது தொகுதியில் முன்னிலையில் உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

சட்டமன்ற தேர்தலை போன்றே கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது.  அங்கு மறைந்த காங்கிரஸ் உறுப்பினர் வசந்த் அவர்களின் மகனும், நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டார்.  அவரை எதிர்த்து பாஜக.,வின் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.  இவர் கடந்த முறையும் போட்டியிட்டு வசந்த் அவர்களிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.  அந்த தொகுதியில் மொத்தம் 68.80 சதவீத வாக்குகள் பதிவாகின.

Kerala Election Result Live Updates – கேரள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை!!

தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் விஜய் வசந்த் 24,218 வாக்குகள் பெற்று மிகப்பெரிய முன்னிலையில் உள்ளார். பாஜகவின் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  13,482 வாக்குகளுடன் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!