பிக்பாஸ் சீசன் 6ல் தொகுப்பாளர் நான் தான் என்று பதிலடி கொடுத்த நடிகர் – ரசிகர்கள் ஹாப்பி!

0
பிக்பாஸ் சீசன் 6ல் தொகுப்பாளர் நான் தான் என்று பதிலடி கொடுத்த நடிகர் - ரசிகர்கள் ஹாப்பி!
பிக்பாஸ் சீசன் 6ல் தொகுப்பாளர் நான் தான் என்று பதிலடி கொடுத்த நடிகர் - ரசிகர்கள் ஹாப்பி!
பிக்பாஸ் சீசன் 6ல் தொகுப்பாளர் நான் தான் என்று பதிலடி கொடுத்த நடிகர் – ரசிகர்கள் ஹாப்பி!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி உலக அளவில் மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோவாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 5 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் அடுத்த சீசன் குறித்ததான தகவல் சமீபத்தில் வெளியாகியது. அதை தொடர்ந்து தற்போது அதை யார் தொகுத்து வழங்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

பிக்பாஸ்:

தமிழ் தொலைக்காட்சியில் மற்ற சேனல்களை காட்டிலும் டிஆர்பி ரேட்டிங்கிலும் சரி, மக்களை என்டர்டைன் செய்வதற்காக பல புது புது ரியாலிட்டி ஷோக்களை கொடுப்பதிலும் சரி, இவற்றில் எல்லாம் முதல் பங்கு வகிப்பது நமது விஜய் டிவி ஒன்று தான். இந்த சேனலில் ஒளிபரப்பாகிய ஷோக்களில் அதிகளவு நேரம் செலவழித்து விரும்பி பார்த்த ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் ஷோ தான். அந்த அளவுக்கு ஐந்து சீசன்களை கடந்தும் அடுத்தடுத்த சீசனுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் அநேகர்.

சந்தியாவுக்காக அம்மாவை எதிர்க்கும் சரவணன் – ‘ராஜா ராணி 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

கடந்த ஐந்து சீசன்களும் அமோக வெற்றி அடைந்ததை அடுத்து பிக்பாஸ் சீசன் 6 இனிமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாது என்று ஒரு தகவல் உலா வந்தது. இதற்கு இன்று, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமல் ஹாசன் அவர்கள் பதிலளித்துள்ளார். அதாவது முன்னதாக வெளியாகிய தகவலின் படி ஆகஸ்ட் மாத இறுதியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்கும் என்பது உண்மை தான். அது போல எல்லா சீசன்களும் எப்படி விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகியதோ அது படியே இந்த சீசனும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்.

Exams Daily Mobile App Download

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசன்களும் தொகுத்து வழங்கிய கமல் ஹாசன் அவர்கள் இறுதியாக பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் இருந்து அவரது விக்ரம் பட ஷூட்டுக்காக விலகியிருந்த காரணத்தால் தற்போது வரக்கூடிய சீசன் 6-ல் அவரே தொகுப்பாளராக வருவாரா? இல்லையா? என்ற ரசிகர்களின் கேள்விக்கும் நான் தான் தொகுத்து வழங்குவேன் என்று கமல் ஹாசன் அவர்கள் கூறியுள்ளார். இவ்வாறு கமல் அவர்கள் அளித்துள்ள பதில் ரசிகர்கள் மத்தியில் இருந்த அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!