ஜனவரி 1, 2025 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி…!! ” இதை கண்டிப்பா செய்யணும்…பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு”..!!

2
????? 1, 2025 ????? ???? ????????? ??????? ??????????????? ?????????????? ???? ?????????...!! " ??? ????????? ?????????...?????????????????? ?????? ???????"..!!
ஜனவரி 1, 2025 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி...!! " இதை கண்டிப்பா செய்யணும்...பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு"..!!

ஜனவரி 1, 2025 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி…!! ” இதை கண்டிப்பா செய்யணும்…பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு”..!!

 

தமிழக அரசானது,  அரசு துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெறும்  தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, ஓய்வூதிய பயன்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கருத்துக்கள் மற்றும் முன்பணங்கள் முதலியவற்றின்  விவரங்களை ஒரே செயலில் பெறும் வகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே “களஞ்சியம்” என்ற செயலியை அறிமுகம் செய்தது. அந்தத் செயலி குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விடுப்பு, ஓய்வூதியம் போன்ற அனைத்து விவரங்களை பெற”களஞ்சியம்” என்ற  செயலியை  பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த செயலியை முழுவதுமாக பயன்படுத்தப்படவில்லை என கருவூலக துறையால் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த செயலியை பயன்படுத்த சில விதிமுறைகளை அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களும் விதிக்கப்பட்டுள்ளது.

1. களஞ்சியம் செயலி குறித்த பயிற்சியை பெற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான விபரத்தினை  இதுவரை அனுப்பாத மாவட்டம் உடனடியாக அனுப்ப வேண்டும்.

2. விடுப்பு விண்ணப்பம் கோருவதற்கு,  பே ஸ்லிப், ஓய்வூதியம் முதலிய அனைத்து விவரங்களுக்கும் விண்ணப்பிக்க இந்த களஞ்சியம் செயலியை பயன்படுத்த வேண்டும்.

3. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள்  தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சம்பளம் பெற்று வழங்கும் அதிகாரிகளுக்கு இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவலையும் பதிவிடுவதோடு, தொடர்ந்து கண்காணிக்க வலியுறுத்த வேண்டும்.

4. பண்டிகை முன்பணம்(Festival Advance) இந்த செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

5. எவ்வித விடுப்பு எடுப்பினும் இந்த செயலியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

6. மேலும், அனைத்து வகையான விடுப்புகளை ஆன்லைன் பதிவேற்றம் செய்திட வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தானாகவே விடுப்பு இருப்பு(Balance Leave) , மெடிக்கல் விடுப்பு போன்றவற்றை இச்செயலியில் பதிவிட வேண்டும்.

7. ஜனவரி 1, 2025 முதல் பென்ஷன் புரோபோசல்ஸ் அனைத்தும் இந்த செயலியில் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.

எனவே, இவ்வாறு புதிய விதிமுறைகளுடன் களஞ்சியம் செயலி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் முழு பயன்பாட்டிற்கு வர உள்ளது என தமிழக பள்ளிக்கல்வித்துறை  இயக்குனர்  கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

 

Follow our Instagram for more Latest Updates

2 COMMENTS

  1. (களஞ்சியம் செயலி தற்போதுள்ள குறைந்த பயன் பெறுவோருக்கே செயல்பட சர்வர் வேலை செய்வதில்லை. இதில் எல்லா அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களும் களஞ்சியம் செயலி மூலம் அனைத்து செயல்பாடுகளையும் செய்ய ஆணையிடுவான் கேளிக்கூத்தாக வ உள்ளது

  2. You idiot. களஞ்சியம் app use பண்ண சொல்றது இன்ப அதிர்ச்சியா. உன்னையெல்லாம் எதால அடிக்கறதுன்னே தெரியல

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!