TCS, Wipro உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் HR வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடம் விளக்கம்!

0
TCS, Wipro உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் HR வேலைவாய்ப்பு - தகுதி, பணியிடம் விளக்கம்!
TCS, Wipro உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் HR வேலைவாய்ப்பு - தகுதி, பணியிடம் விளக்கம்!
TCS, Wipro உள்ளிட்ட பிரபல நிறுவனங்களில் HR வேலைவாய்ப்பு – தகுதி, பணியிடம் விளக்கம்!

உலகளவில் முன்னணி இடத்தை வகிக்கும் IT நிறுவனமான டாடா, விப்ரோ, விஸ்தாரா மற்றும் ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் உள்ளிட்டவை HR பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பணிக்குரிய தகுதி, பணியிடங்கள் குறித்த விரிவான விளக்கங்களையும் அறிவித்துள்ளது.

HR பணியிடங்கள்

கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் IT சேவைகளை வழங்குவதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதால், அவற்றை சரி செய்ய திறமையுடைய புதிய ஊழியர்களை பல முன்னணி நிறுவனங்கள் பணியமர்த்தி வருகிறது. இதனிடையே அனைத்து வகையான மென்பொருள் மற்றும் விற்பனை நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் HR பணிக்கான தேவைகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலகளவில் முன்னணி இடத்தை பிடித்திருக்கும் Tata, Wipro, Vistara போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களும், அமேசான் நிறுவனம் HR பணிகளில் ஆட்கள் தேவை இருப்பதாக அறிவித்துள்ளது.

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

இது தொடர்பான Naukri வேலை வாய்ப்புகள் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும் போது, 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் HR பணியமர்த்தல் கணிசமாக 31% அதிகரித்துள்ளது. எனினும் புதிய HR பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் முதலாவதாக புதுடெல்லியை மையமாக கொண்டு இயங்கி வரும் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஒரு மனித வள நிபுணரைத் (HR) தேடுகிறது. இதற்கு ஆர்வமுள்ள அனைவரும் விண்ணப்பக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கான தகுதியாக ஆய்வுப்படிப்பு அதாவது பிஎச்டி பட்டத்துடன் 4 முதல் 7 வருட அனுபவம் கொண்டவர்களை இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. அடுத்ததாக நொய்டா நாட்டை தலைமையாக கொண்டு செயல்பட்டு வரும் Accenture நிறுவனம், ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்புடன் 0 அல்லது 1 ஆண்டு அனுபவம் உடையவர்கள் முதல் புதியவர்களும் HR பணிக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. முன்னணி ஆன்லைன் விற்பனை தலமான அமேசான் நிறுவனம் ஒரு மூத்த மனித வள நிபுணரை (HR) குர்கான் பகுதியில் பணியமர்த்த உள்ளது.

விண்ணப்பதாரர்கள் HRBP டொமைனில் எம்பிஏ அல்லது HR சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவராகவும், இப்பணியில் 8 முதல் 14 வருட அனுபவம் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது. அடுத்ததாக விப்ரோ நிறுவனம் HR பணியில் புதிய ஆட்சேர்ப்புகளை குர்கான் அலுவலகம் மற்றும் கொல்கத்தா அலுவலகத்திற்காக நியமிக்க உள்ளது. இதற்கு தகுதியாக HR தொடர்புடைய துறையில் 0 முதல் 1 ஆண்டு அனுபவம் அல்லது புதியவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

தவிர கொல்கத்தா அலுவலகத்திற்கான SER பணிக்கான தகுதியாக எம்பிஏ மற்றும் மனித வளத்தில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. பாஸ்டன் ஆலோசனைக் குழு நிறுவனம் புது டெல்லி அலுவலகத்துக்கு தேவையான HR இடத்தை நிரப்ப, Tier 1 அல்லது Tier 2 உள்ள கல்லூரிகள் அல்லது வேறு கல்வி நிறுவனத்தில் MBA பட்டத்துடன் சேவைத்துறையில் HR ஆக 4 முதல் 6 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் தேவை என குறிப்பிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!