JIPMER ஆணையத்தில் ரூ.78,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || கடைசி வாய்ப்பு!
Senior Research Officer / Scientist-D பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Senior Research Officer / Scientist-D பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MD / MS / PhD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- விண்ணப்பதாரர்களின் வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.78,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.12.2024ம் தேதிக்குள் htarcjipmer@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விறைத்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























