
ஜிப்மர் புதுச்சேரி வேலைவாய்ப்பு 2025 – DEO, செவிலியர், திட்ட உதவியாளர் பணியிடங்கள் | மாதம் ₹31,500 வரை சம்பளம்
ஜவஹர்லால் இன்ஸ்டிடியூட் ஆஃப் போஸ்ட் கிராஜுவேட் மெடிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசேர்ச் (JIPMER) நிறுவனம் புதுச்சேரியில் DEO (டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்), Staff Nurse (செவிலியர்) மற்றும் Project Assistant (திட்ட உதவியாளர்) போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு மொத்தம் 3 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் (Offline via Post) அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 26.10.2025, கடைசி தேதி 08.11.2025 ஆகும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ₹18,000 முதல் ₹31,500 வரை சம்பளம் பெறுவார்கள்.
காலியிடங்கள்
| பதவி | காலியிடம் |
|---|---|
| Staff Nurse | 1 |
| Project Assistant | 1 |
| Data Entry Operator | 1 |
| மொத்தம் | 3 |
கல்வித் தகுதி
Staff Nurse:
-
B.Sc நர்சிங் (Nursing) தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Project Assistant:
-
Nursing, Sociology, IT, Computer Science அல்லது Commerce துறையில் பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்
அல்லது -
மேலே குறிப்பிடப்பட்ட துறைகளில் முதுகலைப் பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator:
-
12ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம்
அல்லது -
ஏதேனும் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
-
அதிகபட்சம்: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
NRCB திருச்சி வேலைவாய்ப்பு 2025 – மூத்த திட்ட உதவியாளர் பணியிடங்கள் | மாதம் ₹18,000 சம்பளம்
சம்பளம்
| பதவி | மாதச் சம்பளம் |
|---|---|
| Staff Nurse | ₹31,500/- |
| Project Assistant | ₹31,000/- |
| Data Entry Operator | ₹18,000/- |
விண்ணப்பக் கட்டணம்
-
கட்டணம் இல்லை (No Fee)
தேர்வு முறை
-
எழுத்துத் தேர்வு / நேர்காணல் (Written Exam / Interview) மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
-
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
-
படிவத்தை அச்சிட்டு, முழுமையாக பூர்த்தி செய்யவும்.
-
தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்:
tsipmer@gmail.com

























