ஜே.இ.இ மார்ச் மாத தேர்வு 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

2
2021 ஜே.இ.இ மார்ச் மாத தேர்வு மார்ச்10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ கால அவகாசம் நீட்டிப்பு!!!
2021 ஜே.இ.இ மார்ச் மாத தேர்வு மார்ச்10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - என்.டி.ஏ கால அவகாசம் நீட்டிப்பு!!!

ஜே.இ.இ மார்ச் மாத தேர்வு 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !

2021 ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் ஆணையம் அறிவித்துஇல்லாது.

ஜே.இ.இ தேர்வு:

மத்திய அரசின் உயர்நிலை பல்கலையில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். ஆண்டு தோறும் இதன் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் மாணவர்கள் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கப்படுகிறார்கள். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

புல்பிரைட் நேரு உதவித்தொகை – அமெரிக்க கல்வி அறக்கட்டளை அறிவிப்பு!!!

முதல் கட்ட தேர்வுகளை பிப்ரவரி மாதம் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் கட்ட தேர்வுகளை மார்ச் 15 ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலும்,மூன்றாம் கட்ட தேர்வுகளை ஏப்ரல் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும், நான்காம் கட்ட தேர்வுகள் மே 24ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் நடக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை தேர்வில் கலந்து கொள்ளலாம். தேர்வில் மாணவர் எடுத்துள்ள அதிக பட்ச மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.

TN Job “FB  Group” Join Now

கால அவகாசம் நீட்டிப்பு:

இரண்டாம் கட்ட மார்ச் மாத தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 2ம் தேதி முதல் 6 ம் தேதி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பல தரப்பு கோரிக்கைகளுக்கு பின்னர் மார்ச் மாத ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 10ம் தேதி காலை 10 மணி வரையிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் மார்ச் 10ம் தேதி இரவு 11:59 மணிக்குள் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிக விவரங்களை ஜே.இ.இ -ன் அதிகார பூர்வ இணைய தளமான jeemain.nta.nic.in ல் தெரிந்து கொள்ளலாம்.

Download Press Notice 2021 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!