புல்பிரைட் நேரு உதவித்தொகை – அமெரிக்க கல்வி அறக்கட்டளை அறிவிப்பு!!!

0
புல்பிரைட் நேரு உதவித்தொகை - அமெரிக்க கல்வி அறக்கட்டளை அறிவிப்பு!!!
புல்பிரைட் நேரு உதவித்தொகை - அமெரிக்க கல்வி அறக்கட்டளை அறிவிப்பு!!!
புல்பிரைட் நேரு உதவித்தொகை – அமெரிக்க கல்வி அறக்கட்டளை அறிவிப்பு!!!

அமெரிக்க கல்வி அறக்கட்டளையானது முதுநிலை பட்டபடிப்புக்கான உதவித்தொகை வழங்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

புல்பிரைட் நேரு உதவித்தொகை:

புல்பிரைட் நேரு உதவித்தொகை என்ற திட்டத்தை அமெரிக்க கல்வி அறக்கட்டளையானது கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க-இந்தியா கல்வி அறக்கட்டளை (யு.எஸ்.ஐ.இ.எப்.,) ஆரம்பித்தது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட இந்திய கல்வி நிறுவனத்தில் இளநிலை அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதற்கு குறைவான கால அளவை கொண்ட படிப்பை படித்திருந்ததால் முதுநிலை படிப்பையும் முடித்திருக்க வேண்டும்.

ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி., வாரிய பொதுத்தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு!!!

பாட பிரிவுகள்:

கலாச்சார பாதுகாப்பு மற்றும் அருங்காட்சியக ஆய்வுகள் உட்படக் கலை படிப்புகள், பொருளாதாரம், சுற்றுச்சூழல் அறிவியல், உயர் கல்வி நிர்வாகம், சர்வதேச விவகாரம், சர்வதேச சட்டம், இதழியல், பொது நிர்வாகம், பொது சுகாதாரம், நகர்ப்புறம் மற்றும் பிராந்திய திட்டமிடல், மகளிர் மற்றும் பாலினம் சார்ந்த படிப்புகள் போன்ற முதுநிலை படிப்புகளுக்கு மட்டுமே அமெரிக்க கல்வி அறக்கட்டளையின் உதவித்தொகை வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஜே- 1 விசா மற்றும் அமெரிக்கா வந்து செல்வதற்கான விமான பயணச்சீட்டு, கல்வி கட்டணம் மற்றும் தங்கும் வசதி போன்ற சலுகைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். புல்பிரைட் நேரு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க மே 17ம் தேதி கடைசி நாளாகும். புல்பிரைட் நேரு உதவித்தொகை பெற தகுதியுள்ளவர்கள் http://www.usief.org.in என்ற இணைய தளத்தில் இருந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யது விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!