JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு – தேர்வுக்கான அறிவுறுத்தல்கள்!

0
JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு - தேர்வுக்கான அறிவுறுத்தல்கள்!
JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு - தேர்வுக்கான அறிவுறுத்தல்கள்!
JEE மெயின் 2021, 4ம் கட்ட தேர்வு அட்மிட் கார்டு விரைவில் வெளியீடு – தேர்வுக்கான அறிவுறுத்தல்கள்!

தேசிய தேர்வுகள் முகமை ஜேஇஇ மெயின் 4ம் கட்ட தேர்வின் நுழைவு சீட்டு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தேர்வுக்கான அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

JEE மெயின்:

மத்திய அரசின் உயர்நிலை பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு மத்திய அரசால் நடத்தப்படுவது தான் ஜேஇஇ தேர்வாகும். வழக்கமாக ஆண்டிற்கு இரண்டு முறை நடக்கும் இந்த தேர்வானது நடப்பு ஆண்டில் இருந்து நான்கு முறை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் 2 கட்ட தேர்வுகள் முன்னதாக நடந்து முடிந்து விட்ட நிலையில், 3 மற்றும் 4ம் கட்ட தேர்வுகள் கொரோனா தொற்று அதிக பரவல் அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. JEE மெயின்ஸ் 3ம் கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25 வரை நடந்தது.

மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார் – பக்தர்கள் அதிர்ச்சி!

JEE மெயின் 4ம் கட்ட தேர்வுகள் ஆகஸ்ட் 26, 7, 31, மற்றும் செப்டம்பர் 1, 2. ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. 4ம் கட்ட தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 9ம் தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி இரவு 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. தேசிய தேர்வு முகமை JEE மெயின் 4ம் கட்ட தேர்வின் நுழைவு சீட்டு வெளியிடும் தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. தேர்வு குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அறிவுறுத்தல்கள்:

  • தேர்வு மையத்திற்குள் விண்ணப்பதாரர்கள் தங்கள் JEE மெயின் 2021 தேர்வுக்கான நுழைவு சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • மாணவர்கள் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
  • தேர்வின் 2ம் தாளுக்கு விண்ணப்பதாரர்கள் வரைவதற்கான உபகரணங்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
  • தேர்வின் கணித பயன்பாடுகளுக்காக ஒரு வெற்று காகிதம் மற்றும் பேனா/பென்சில் வழங்கப்படும். இந்த காகிதத்தை தேர்வு முடிந்தவுடன் தேர்வு அறையில் உள்ள கண்காணிப்பாளரிடம் திருப்பி கொடுக்க வேண்டும். அந்த காகிதத்தில் மாணவரின் பெயர் மற்றும் தேர்வு எண் கண்டிப்பாக எழுத வேண்டும்.

நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் முறை:

  • முதலில், jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதற்கான கடவு சொல்லை உள்ளிட்டு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்யும் பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • குறிப்பிட்ட பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து EE மெயின் 2021 நுழைவு சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!