மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார் – பக்தர்கள் அதிர்ச்சி!

0
மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார் - பக்தர்கள் அதிர்ச்சி!
மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார் - பக்தர்கள் அதிர்ச்சி!
மதுரை ஆதினம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார் – பக்தர்கள் அதிர்ச்சி!

மதுரையின் 292 ஆதீனமாக இருந்து வந்த அருணகிரிநாதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

மதுரை ஆதினம்:

மதுரை ஆதீனம் என்பது தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றாகும்.மதுரை நகரில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சைவசமய நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது. திருஞானசம்பந்தர் ஒழுங்குபடுத்திய மதுரை ஆதீனம் மடம், சைவ சித்தாத்தங்களை அடிப்படையாகக் கொண்ட திருமடம் ஆகும். 292 ஆவது ஆதீனமாக அருணகிரி நாதர் இருந்து வந்தார்.

UPSC வருடாந்திர தேர்வு அட்டவணை 2022 – வெளியீடு!

மதுரை ஆதீனத்திற்குரிய 3 கோயில்கள் தஞ்சாவூர், திருவாரூரில் உள்ளன. இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன. தற்போது வரை ஆதீனமாக இருந்து வந்த அருணகிரி நாதர் சைவமும், தமிழும் தனது இரு கண்கள் என்று வாழ்ந்து வந்தவர்.

TN Job “FB  Group” Join Now

மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் அவர்கள் கடந்த 9ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் சுவாசக் கோளாறு இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மதுரை ஆதினம் அருணகிரிநாதர் இன்று காலமானார். அன்னாரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!